Friday 3rd of May 2024 02:13:12 AM GMT

LANGUAGE - TAMIL
உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் ரொறன்ரோ 6 ஆம் இடம்

உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் ரொறன்ரோ 6 ஆம் இடம்


உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் கனடாவின் - ரொறன்ரோ ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது.

உலகிலேயே பாதுகாப்பான நகரமாக ஜப்பானின் டோக்கியோ நகரம் மூன்றாவது முறையாகவும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தை சிங்கப்பூரும் மூன்றாம் இடத்தை ஜப்பான் - ஒசாகா நகரமும் பிடித்துள்ளன.

உலகின் பாதுகாப்பான நகரம் குறித்த மாநாடு சிங்கப்பூரில் நடந்தது. சிங்கப்பூரைச் சேர்ந்த என்.இ.சி. கோர்ப்பரேஷன் என்ற தொழில்நுட்ப நிறுவனம் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது.

தனி நபர் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு உட்பட நகரங்களில் பாதுகாப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

தனி நபர், நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின்படி பல நாடுகளைச் சேர்ந்த 60 நகரங்கள் பட்டியலிடப்பட்டன.

அதன்படி, உலகிலேயே பாதுகாப் பான நகரமாக ஜப்பானின் டோக்கியோ நகரம் விளங்குவதாக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதில் ஆறாவது இடத்தை கனடாவின் ரொறன்ரோ நகரம் பிடித்துள்ளது.

உலகிலேயே பாதுகாப்பான நகரங்களாக முதல் 20 இடங்களைப் பிடித்த நகரங்கள் வருமாறு,

1. டோக்கியோ - ஜப்பான்,

2. சிங்கப்பூர் - சிங்கப்பூர்

3. ஒசாகா - ஜப்பான்

4. ஆம்ஸ்டர்டாம் - நெதர்லாந்து

5. சிட்னி - ஆஸ்திரேலியா

6. ரொறன்டோ - கனடா

7. வொஷிங்டன் டி.சி - அமெரிக்கா

8. கோபன்ஹேகன் - டென்மார்க்

8. சியோல் - தென் கொரியா

10. மெல்போர்ன் - ஆஸ்திரேலியா

11. சிகாகோ - அமெரிக்கா

12. ஸ்டாக்ஹோம் - ஸ்வீடன்

13. சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்கா

14. இலண்டன் - ஐக்கிய இராச்சியம்

15. நியுயோர்க் - அமெரிக்கா

16. பிராங்பேர்ட் - ஜேர்மனி

17. லொஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்கா

18. வெலிங்டன் - நியூசிலாந்து

19. சூரிச் - சுவிட்சர்லாந்து

20. ஹொங்கொங் - சீனா

இந்தப் பட்டியலில் இந்தியாவின் மும்மை 37 ஆவது இடத்திலும் டெல்லி 41 ஆவது இடத்திலும் உள்ளன.

சட்டம் ஒழுங்கு, நகர்ப்புற வாழ்க்கை உட்பட பல அம்சங்களை ஆராய்ந்து இந்த பட்டியலை தயாரித்ததாக மாநாட்டு நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE